Category: உள் நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை: நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது நாளை (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைபரீட்சார்த்திகளுக்காக மேலதிக வகுப்புகளை…

வெவன்டன் தமிழ் மகா வித்தியாலயத்தை இடமாற்றத் தீர்மானம்

மண்சரிவு அபாயம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ள கொத்மலை, ரம்பொடை வெவன்டன் தமிழ் மகா வித்தியாலயத்தை வேறு இடத்தில் நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொத்மலை தவலந்தென்னையில் அமைந்துள்ள தொண்டமான் கலாசார நிலையத்தில் பாடசாலையை தற்காலிகமாக நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சருடன் அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.…

தையிட்டி விகாரை வழக்கு – சந்தேகநபர்களுக்கு சொந்த பிணை

தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (5) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வேலன் சுவாமி உட்பட…

மது போதையில் அரச பேருந்தை செலுத்திய சாரதி கைது

ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நேற்று (4) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது யாழ்ப்பாணம் –…

சர்ச்சைக்குரிய பாடத் தொகுதி தொடர்பான அறிக்கை சமர்பிப்பு

புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் (Module), தகாத இணையத்தளம் ஒன்றைக் குறிக்கும் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அது குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு தமது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.…

புதிய கல்வி சீர்திருத்தம் அமுலாவது தொடர்பில் வௌியான தகவல்

நாளை (5) முதல் ஆரம்பமாகும் புதிய கல்வி ஆண்டில், தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 29ஆம் திகதியும், தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 21ஆம் திகதியும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்க…

உணவுச் சட்டத்தின் சில விதிமுறைகள் அமுலாகும் காலம் ஒத்திவைப்பு

உணவுச் சட்டத்தின் 32 வது பிரிவின் கீழ் உள்ள சில விதிமுறைகள் அமுலாகும் திகதியை ஒத்திவைக்க சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர்…

நயினாதீவு விகாராதிபதி, மாவட்ட அரசாங்க அதிபர் இடையே சந்திப்பு

நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ தேரருக்கும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது இன்று (4) காலை. 10.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில்…

எல்லை தாண்டிய 9 இந்திய மீனவர்களுக்கு ஜனவரி 7 வரை விளக்கமறியல்!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, மயிலாடுதுறைப் பகுதியைச் சேர்ந்த…