Category: உள் நாட்டு செய்திகள்

புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்‌தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசாங்க…

பதுளை – கொழும்பு வீதியின் வாகன போக்குவரத்துக்கு மட்டுப்பாடு

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹல்துமுல்லை பகுதியில் வாகன போக்குவரத்துக்காக தற்போது ஒரு வழிப்பாதை திறந்துவிடப்பட்டுள்ளது. பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடையேயான பகுதியில் நேற்று (24) இரவு மண்சரிவு ஏற்பட்ட நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. எனினும், குறித்த பகுதியில்…

வங்கி அட்டை மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை ஆரம்பம்

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை இன்று (24) காலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்பிமல் ரத்னாயக்க தலைமையில் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் ஆரம்பமானது. இங்கு பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பாவித்துள்ளார்களா என்பதைக்…

தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் – வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் தலைமறைவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சந்தேக நபர்களால் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகளையும் வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளதாகத்…

பதுளை – கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதுளை – கொழும்பு வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

யாழில் இன்று முதல் புதிய பேருந்து சேவை

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு – காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து கொழும்பில் இருந்து வந்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம்…

அனர்த்த பாதிப்பு – பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்துத் திட்டம்

கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையால் தடங்கல்களை எதிர்கொண்டுள்ள உயர்தரப் பரீட்சார்த்திகள், உரிய மாற்று வீதிகள் ஊடாக தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியன இணைந்து விசேட போக்குவரத்துத்…

முக்கிய ரயில் சேவையில் இருந்து இடைவிலகும் இயந்திர சாரதிகள்!

மஹவ முதல் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் சரக்கு மற்றும் எரிபொருள் தாங்கி ரயில் சேவைகளை நிறுத்துவதற்கு ரயில்வே லொகோமோட்டிவ் ஒபரேட்டிங் இன்ஜினியர்ஸ் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (23) நள்ளிரவு முதல் சரக்கு மற்றும் எரிபொருள் ரயில் சேவைகள்…

சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில்…

பேருந்து பயணிகளுக்கான மகிழ்ச்சி செய்தி!

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான ஆரம்ப விழா நாளை காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து…