Category: உள் நாட்டு செய்திகள்

அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் தயார் நிலையில்!

எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலை அதிகரிப்புக்கு முகம் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நிலவக்கூடிய அலை வடிவான காற்று காரணமாக மழையுடனான வானிலை…

கடுகண்ணாவை ஊடாக பயணிப்போருக்கான அறிவித்தல்

மண்சரிவு காரணமாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதி, தற்காலிகத் தீர்வு வழங்கப்பட்டே போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மழைக்காலங்களில் இந்த வீதியைப் பயன்படுத்தும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி…

368,000 ரூபாவாக அதிகரித்த தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகின்றது. இன்று (27) நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,553 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில்,…

கைதான டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல் உத்தரவு

பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு…

நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல்லை விநியோகிக்கும் புதிய திட்டம்

கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கடந்த போகத்தில் சேகரிக்கப்பட்ட நெல்லை லங்கா…

கண்டி மாவட்ட செயலக வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாரின் அறிக்கை

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை குறித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, செயலகத்தின் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி அனுப்பப்பட்டிருந்தது.…

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான…

பண பந்தயத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி- 7 இளைஞர்கள் கைது

பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ, எகொடை உயன மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18, 19, 20, 21…

சுனாமி பேரழிவின் 21 ஆவது ஆண்டு நிறைவு: இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி…

அமைதிகாக்கும் அதிகாரிகளைப் பாதுகாப்பாக மீட்ட இலங்கை விமானப்படை!

இலங்கை விமானப்படை CASEVAC நடவடிக்கையில் இரண்டு அமைதி காக்கும் படையினரை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது. மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் சேவையாற்றும் இலங்கை விமானப்படை விமானப் பிரிவு, இம்மாதம் 15 ஆம் திகதி செமியோ (Semio) பிரதேசத்தில் ஏற்பட்ட…