Category: உள் நாட்டு செய்திகள்

இலஞ்சம் பெற்று தப்பிச் சென்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

200,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி…

கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி!

மன்னார், மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியினுள் போட்ட நிலையில், குறித்த சடலம் நேற்று (04) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக எமது…

வெலிக்கடை சிறைக்கைதி உயிரிழப்பு: மூன்று சிறைக்காவலர்கள் கைது

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.…

ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை உருவாகும் – ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால், ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலின்…

சர்வஜன அதிகாரம் வௌியிட்டுள்ள கண்டனம்!

அரசாங்கத்தால் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு தொடுக்கப்பட்ட அரசியலமைப்புக்கு முரணான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வஜன அதிகாரம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான ரஞ்சன் செனவிரத்ன, சம்பந்தப்பட்ட கூற்றுக்கள் ஆத்திரமூட்டும் தன்மை கொண்டவை என்றும் அரசியலமைப்பு ரீதியாக நியாயப்படுத்த…

இந்த ஆண்டில் இதுவரை டெங்குவால் 12 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 12 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்களும் அடங்குவதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர, கொழும்பு…

தன்சல் பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களை பதிவு செய்யும் பணிகள் இன்று (4) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டங்களில் இப்பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்…

சர்வதேச பளுதூக்கல் போட்டி: யாழ். மாணவன் சாதனை!

சமோவா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நாடுகள் பங்கேற்ற ‘Samoa IBFC Universal Weightlifting Cup – 2026’ பளுதூக்கல் போட்டியில், இலங்கை சார்பாகப் பங்கேற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவரும், யாழ்.…

வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாளை (03) பகல் வேளையில் வெப்ப சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது ‘கவனம் செலுத்த வேண்டிய’…

தலங்கமயில் இணையதள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல்…