Category: உள் நாட்டு செய்திகள்

சீரற்ற வானிலை – பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 387 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன்,…

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை 10.20 மணியளவில் வெலிகம பிரதேச சபையில் உள்ள அவரது அறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரில் ஒருவர் கடிதம் ஒன்றில் கையெழுத்தை பெற்றுக்கொள்வதை போல்…

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணி நேரம் நீர் வெட்டு

கொழும்பு 01 முதல் 15 வரை மற்றும் பல முக்கிய நகரங்களில் நாளை (23) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. நாளை காலை 10.00 மணி முதல்…

இறக்குமதி அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை நிர்ணயம் அதன் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பச்சை…

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் சொகுசு பேருந்து விபத்து-இளைஞர் ஒருவர் பலி

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை விபத்திற்குள்ளானது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில்…

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த…

மருந்துகளுக்கு விலை சூத்திரம்!

மருந்துகளுக்கான விலை நிர்ணய சூத்திரம் இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு வகை மருந்துகளுக்கும் அதிகபட்ச விலை வரம்பு நிர்ணயிக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இதற்கிடையில், சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவையின்…

நாடு முழுவதும் 36,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடு முழுவதும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர்…

வாகன அடையாள சின்னங்கள் தொடர்பில் அரசின் முடிவு

சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் உள்ள அடையாள சின்னங்களை அகற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை என்றும் சுகாதார அமைச்சர் இன்று பாராளுமன்றில் வைத்து சுட்டிக்காட்டினார்.…

சீரற்ற வானிலையால் 8000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக, 06 மாவட்டங்களில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 335 ஆகும். இதற்கிடையில், அவிசாவளை – மடோல பகுதியில், நேற்று பிற்பகல் பெய்த கனமழையின் மத்தியில், பயிற்சி வகுப்புகளில்…