Category: உள் நாட்டு செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து – யாழ்ப்பாணத்தில் பரபரப்பு.

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. இன்று மதியம் எரிபொருள் தாங்கி ஊர்தியிலிருந்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிலக்கீழ் சேமிப்புத் தொட்டிக்குள்…

ஜா-எல துப்பாக்கிச் சூடு: மூன்று வீடுகளை துளைத்த தோட்டாக்கள்!

இன்று (07) அதிகாலை ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, துப்பாக்கிதாரிகள் குறித்த வீட்டின் அருகில் உள்ள மேலும் இரண்டு வீடுகளின் மீதும் துப்பாக்கிச் சூடு…

குருநகர் படகு விபத்து – காரணத்தைக் கண்டறியுமாறு பணிபுரை.

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் இன்று (6) படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காணாமல் போன இருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விபத்துக்குள்ளான குறித்த படகில் பயணித்த நிலையில் மீட்கப்பட்டிருந்தவர்களில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…

IRIS Bushehr கப்பலில் இருந்த பணியாளர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (5) விசேட அறிவிப்பொன்றை…

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல்: 84 பேரின் சடலங்கள் மீட்பு

இதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டேனா’ போர்க்கப்பல், இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. 180 பேர் கொண்ட பணியாளர்களுடன்,…

காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்து

காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை கடற்படையின் படகுகள் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் பின்னர் காலி…

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது. ஃபிட்ஸ் எயார் (Fits…

அமெரிக்கப் பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை அமெரிக்க – இராஜாங்க அமைச்சு

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில், நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

மத்திய கிழக்கு போர் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் – மஹிந்த

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (02) ஹோமாகம வரலாற்றுச் சிறப்புமிக்க இம்புலகந்த ஸ்ரீ சம்புத்தி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…

‘ஆரோக்யா’ திட்டத்தைப் புறக்கணித்தது GMOA!

சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ள ‘ஆரோக்யா’ செயற்றிட்டத்திலிருந்து இன்று (02) முதல் விலகுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காமையினாலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அதன் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹம்சமால்…