Category: வெளிநாட்டு செய்திகள்

போர் எப்போது முடியும் என்பதை நாங்களே தீர்மானிப்போம்: ட்ரம்ப்பிற்கு ஈரான் பதிலடி

ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான இராணுவ நடவடிக்கைகளை எப்போது நிறுத்துவது என்பதைத் தாங்களே தீர்மானிப்போம் என ஈரான் இதன்போது தெரிவித்துள்ளது.…

எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, பாகிஸ்தான் அரசு பல கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை, அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு குறைப்பு மற்றும் வாரத்திற்கு…

இன்று ஈரானுக்கு ‘கறுப்பு தினமாக’ அமையுமா? அமெரிக்கா எச்சரிக்கை!

ஈரான் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களை விட மிகவும் பாரதூரமான மற்றும் கடுமையான தாக்குதல்கள் இன்று (10) நடத்தப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இன்று பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அதிரடி…

எரிபொருள் விலை உயர்வு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

எரிபொருள் விலை அதிகரிப்பு அமெரிக்காவிற்குள் பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அது நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தெளிவான கருத்தாகும். இதன் காரணமாக, போர் சூழலால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையை…

ஈரானின் புதிய அதி உயர் தலைவர்.

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் போது கடந்த 28…

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவர்கள் நால்வரும் தற்போது சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.…

இஸ்ரேலுக்கு 20,000 குண்டுகளை விற்க ட்ரம்ப் நிர்வாகம் அனுமதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சுமார் 650 மில்லியன் டொலர் மதிப்பிலான 20,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க காங்கிரஸைத் தவிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக…

அமெரிக்காவிற்கு ஈரான் சவால்: ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை ஈடுபடுத்துமாறு ஈரான் புரட்சிகரப் படையின் பேச்சாளர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சவால் விடுத்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேவையேற்படின், ஹார்முஸ்…

அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி

நிபந்தனையற்ற சரணடைவுக்கான அமெரிக்காவின் கோரிக்கை, “அவர்கள் தங்களது கல்லறைக்கே கொண்டு செல்ல வேண்டிய ஒரு கனவு” என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஈரானிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட உரையில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.…

கட்டார் வான்பரப்பு பகுதி அளவில் திறப்பு

கட்டார் தனது வான்பரப்பை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விமானப் பயணங்களுக்காக பகுதி அளவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, போர் ஆரம்பமாகி ஒரு வாரத்தின் பின்னர் முதற்தடவையாக மட்டுப்படுத்தப்பட்ட விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அத்தியாவசியப் பொருட்கள்…