Month: September 2025

21 கோடி ரூபாய் தங்க பிஸ்கட்டுகளுடன் AASL ஊழியர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54 வயதுடைய விமான நிலைய ஊழியர் ஒருவர் 210.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5.941 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். குறித்த ஊழியர், 51 தங்க பிஸ்கட்டுகளை, இரு…

மித்தெனிய இரசாயனங்களில் ஐஸ் மூலப்பொருள் இருப்பது உறுதி

மித்தேனிய பகுதியில் உள்ள காணியொன்றிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 20 இரசாயன மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் (NDDCB) விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கெஹெல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க…

நீண்ட தூர பேருந்துகளுக்கு கட்டாய அடிப்படை தர பரிசோதனை

இலங்கை அரசாங்கம் நீண்ட தூர பேருந்துகள் அனைத்தையும் பயணத்துக்கு முன் கட்டாய அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளது. இது எதிர்வரும் மாதம் (ஒக்டோபர் 2025) முதல் அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை மற்றும் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து…

ஆசிய கிண்ணத் தொடர் – இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு இதோ!

ஆசிய கிண்ண தொடரில் நடைபெற்று வரும் தற்போதைய போட்டியில், பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய…

60 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை பேருந்து நிலையம்

பல தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த பேருந்து நிலையம் முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளது. புதுப்பித்தல் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட செலவு 424 மில்லியன்…

4 பேரை சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

பண்டாரகமவில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நான்கு கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் சந்தேக நபர் நான்கு பேரை…

சோளம் பயிரிடும் விவசாயிகளின் பதிவு ஆரம்பம்

2025/26 பெரும் போகத்தில் இலங்கையில் சோளம் பயிரிடும் விவசாயிகளை பதிவு செய்வதற்கான வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், www.agrarian.lk மற்றும் www.agrariandept.gov.lk ஆகிய இணையத்தளங்களில் இதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தபால் சேவை நவீன மயமாக்கலுக்காக 2085 மில்லியன் ஒதுக்கீடு

தபால் சேவையின் எதிர்கால நவீனமயமாக்கலுக்காக இந்த ஆண்டு 2,085 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் பலப்பிட்டிய புதிய தபால் நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில்…

பேருந்துகளை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிருபம் ரத்து

பேருந்துகளை அலங்கரிப்பதற்கும். மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…

ரஷியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ரஷியாவின் கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் இன்று (13) காலை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7.4 ரிக்டர் அளவில், 39.5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல்…