ஆசிய கிண்ண தொடரில் நடைபெற்று வரும் தற்போதைய போட்டியில், பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் ஷமிம் ஹொசைன் அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும், ஜாக்கர் அலி ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

By RifkaNF