Month: September 2025

T-81 ரக துப்பாக்கியுடன் பெக்கோ சமனின் சகா கைது

தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் நெருங்கிய சகா ஒருவர் எம்பிலிபிட்டிய பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிபிட்டியவின் கங்கேயாய பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் இருந்து T-81 ரக…

சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் தொடர்பில் விளக்கமளித்த பிரதியமைச்சர்

சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் ஊடாக சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரசபையை நிறுவும் அதிகாரம் வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் குறித்து விசேட விளக்கமளிக்கும் போதே பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சூதாட்டத்தால்…

நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு

நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா…

எல்ல கோர விபத்தில் மற்றுமொரு பெண்ணும் உயிரிழப்பு

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்தார். தங்காலை மாநகர சபையின் பணியாளரான 41 வயதான நமாலி கமகே என்பவரே உயிரிழந்ததாக எமது செய்தியாளர்…

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து விடைபெற்ற மஹிந்தவின் பதிவு!

பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான எனது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து நான் பெறும் பாதுகாப்பு, வேலைக்கு அப்பாற்பட்ட மிகவும் அன்பான பிணைப்பாகும். நான் தங்காலையில் இருந்தாலும் விஜேராமவில் இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தான். நான் உயிருடன் இருக்கும் வரை, நாம் அனைவரும்…

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 2025.08.06ஆம்…

சட்டவிரோத பாம்புகளுடன் சிக்கிய பெண்

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு…

நாமலின் திருமணத்திற்கான மின்சாரக் கட்டணம் குறித்த மனுவை விசாரிக்க அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபைக்கு சரியான நேரத்தில் செலுத்தத் தவறியதன் மூலம், இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள்…

91 பறவைகளுடன் 2 சந்தேக நபர்கள் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 91 பறவைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 2 சந்தேக நபர்களையும் கடற்படை கைது செய்துள்ளது. மன்னார், பேசாலை, சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட படகில்…

வவுனியா மாநகர எல்லைக்குள் புகைத்தல் பகுதிகளுக்கு தடை!

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு நேற்று (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் நேற்றைய அமர்வின் போது குறித்த உத்தரவினை முதல்வர் காண்டீபன் வழங்கியுள்ளார். குறிப்பாக வவுனியா நகரத்தில் உள்ள சில உணவங்களுக்கு பின்புறமாக புகைப்பிடிப்பதற்கென சிறிய…