Month: September 2025

அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

கடந்த வாரத்தில் அரிசி தொடர்பான 70 சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 55 சுற்றிவளைப்புகள் அரிசி விற்பனை தொடர்பிலும் ஏனைய 15 சுற்றிவளைப்புகள் களஞ்சியப்படுத்தல் சுற்றிவளைப்புகளும் அடங்கும் என அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. அரிசியை பதுக்கி வைத்தல்,…

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கிய இலங்கை மின்சார சபை ஊழியர்கள்

இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதன் ஊழியர்கள் கடந்த 17 நாட்களாக…

மருந்து தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல – சுகாதார அமைச்சர்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர், இந்த விடயத்தை கூறியுள்ளார். கொள்முதலில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த…

சாரதிகளுக்கு, அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ‘பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (20) அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக்…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் நடத்திய சோதனையின் போதே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மீனவர்களுடன், 35 டிங்கி படகுகளையும்,…

யாழில் விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (20) விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி மதில் ஒன்றில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்…

மண்டைத் தீவு சர்வதேச மைதான அகழ்வில் வெடிப்பொருட்கள் மீட்பு

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மண்டைத் தீவு சர்வதேச கிரிக்கெட் மைதான வளாகத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. T – 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்றுறை நீதிமன்ற அனுமதியுடன்…

ஆப்கானிஸ்தானின் 2 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அபராதம்

அபுதாபியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான ஆசியக் கிண்ண போட்டியின் போது, ​​ஐ.சி.சி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான நூர் அஹமட் மற்றும் முஜீப்பூர் ரஹ்மான் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கண்டிக்கப்பட்டுள்ளனர்.…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) வயது மூப்பு காரணமாக காலமானார். மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த 86 வயது இவர், ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார். இவர், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்…

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20) நடைபெறுகிறது. கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இவ்விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒன்றாக நிற்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்போம்” என்ற கருப்பொருளின் கீழ்…