Month: September 2025

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20) முற்பகல் 10 மணி வரை அமலில் இருக்கும்…

திருகோணமலை கடற்பரப்பில் நேற்று நிலநடுக்கம்

திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (18) மாலை 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும்…

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

வவுனியா முதல் மஹாவ வரையிலான ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளின் போது, ​​மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று (18) அறிவிக்கப்பட்டது. இந்த மனுவை மாற்றுத்திறனாளி பெண்கள் சங்கத்தின்…

புத்தளத்தில் 5 கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் மீட்பு

புத்தளம் நாகவில்லு பிரதேசத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் தடை செய்யப்பட்ட ஒருதொகை மீன்பிடி வலைகள் நேற்று முன்தினம் (17) அதிரடிப்படை மற்றும் புத்தளம் நீரியல் வளத் துறை அதிகாரிகள் இணைந்து கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட…

பிரபல நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46. நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததை அடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு…

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கான தடை உத்தரவில் திருத்தம்

பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. கட்டுமானத் துறையில் உள்ளவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து…

மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம்

வணிக ரீதியாகவும் ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பயிரிடப்படும் மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. விவசாயிகள் தங்கள் “இஞ்சி” பயிற்செய்கைக்கு ஏக்கருக்கு 200,000 ரூபா வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்…

சொபதனவியின் 350 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைப்பு

கெரவலப்பிட்டியவின் சொபதனவி (LNG) மின் உற்பத்தி நிலையத்தின் 350 மெகாவோட் மின்சாரம் சற்றுமுன்னர் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஹரினி அமரசூரியவும், எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நீர்வெட்டு அறிவிப்பு மீளப்பெறப்பட்டது!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) விடுக்கப்பட்ட நீர் விநியோகத் தடை அறிவிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கமைய, அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளில் வழமைப் போல் நீர்விநியோகம் தடையின்றி நாளைய தினம் இடம்பெறும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அம்பத்தலை…

நீர் வெட்டு குறித்த அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) 9 மணி நேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கும் பிரதான உள்ளீட்டு பம்பிங்…