Month: December 2025

இந்திய மகளிர் அணியிடம் டி-20 தொடரை இழந்த இலங்கை!

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 ஓவர் தொடரில் நேற்று இடம்பெற்ற 03 ஆவது போட்டியிலும் இலங்கை மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர்…

கண்டி மாவட்ட செயலக வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாரின் அறிக்கை

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை குறித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, செயலகத்தின் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி அனுப்பப்பட்டிருந்தது.…

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான…

பண பந்தயத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி- 7 இளைஞர்கள் கைது

பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ, எகொடை உயன மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18, 19, 20, 21…

குஜராத்தில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, அதிகாலை…

சுனாமி பேரழிவின் 21 ஆவது ஆண்டு நிறைவு: இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி…

தமிழக வெற்றிக் கழக பெண் உறுப்பினர் தற்கொலை முயற்சி

தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் நியமனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிப்பு இதுவரை வெளியிடபடாமல் இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான புதிய…

அமைதிகாக்கும் அதிகாரிகளைப் பாதுகாப்பாக மீட்ட இலங்கை விமானப்படை!

இலங்கை விமானப்படை CASEVAC நடவடிக்கையில் இரண்டு அமைதி காக்கும் படையினரை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது. மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் சேவையாற்றும் இலங்கை விமானப்படை விமானப் பிரிவு, இம்மாதம் 15 ஆம் திகதி செமியோ (Semio) பிரதேசத்தில் ஏற்பட்ட…

“தேசிய பாதுகாப்பு தின” பிரதான நிகழ்வு நாளை காலியில்

இம்முறை “தேசிய பாதுகாப்பு தின” பிரதான நினைவுகூரல் நிகழ்வு நாளை (26) காலி, “பெராலிய சுனாமி நினைவுத் தூபி” முன்னிலையில் காலை 8.30 மணி முதல் காலை 11.00 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. “தேசிய பாதுகாப்பு தினத்தை” முன்னிட்டு,…

பேருந்து விபத்து: 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (25) காலை 7.15 மணியளவில் சேருநுவர, மகிந்தபுர சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற சமயத்தில் பேருந்தில் சுமார்…