Month: December 2025

கானா போதகர் எபோ நோவாவின் புதிய அறிவிப்பால் மக்கள் குழப்பம்!

இன்று (25) கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியப்போவதாகக் கூறி மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பீதியை கிளப்பிய கானா நாட்டு மதபோதகர் எபோ நோவா (Ebo Noah), தற்போது “உலக அழிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று உலகம்…

தையிட்டி விகாரை காணி மக்களுடையது…யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்டது; நயினாதீவு விகாராதிபதி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில், தற்போது விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, பொதுமக்களுக்கு சொந்தமானது என , நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதலகல பத்ம தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டு நவதலகல பத்ம தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு; பலரும் இரங்கல்

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) ஆஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மறைந்த ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) விடுதலை போராட்டக் களத்தில் கடற்புலிகள் மகளிர் படையணியில் இருந்தவர் என கூறப்படுகின்றது. போராட்ட காலத்தில்…

சரணடைந்த எம்.பி அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பான வழக்கு, நேற்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…

போலந்திலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) நேற்று (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஸ்மார்ட் விங்ஸ் (Smart Wings) விமான சேவைக்குச் சொந்தமான 3Z-7648 என்ற இலக்கமுடைய இந்த…

‘டித்வா’ புயல் காரணமாக 3.74 இலட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

‘டித்வா’ காரணமாக இலங்கையில் 3 இலட்சத்து 74 ஆயிரம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகத் தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனால்…

தாய்லாந்திலிருந்து தபாலில் வந்த ‘குஷ்’

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் எடை 6 கிலோ 201 கிராம் எனச் சுங்கப்…

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவைகள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (24) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்தார். நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

நாளை முதல் அமுலாகும் பதுளை – அம்பேவெல ரயில் நேர அட்டவணை

நாளை (20) முதல் மலையகப் ரயில் மார்க்கத்தில் பதுளை மற்றும் அம்பேவெலவிற்கு இடையில் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயிலவே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, பதுளை ரயில் நிலையத்திலிருந்து மு.ப 9.00 மணிக்கும் பி.ப 3.00 மணிக்கும் இரண்டு ரயில் சேவைகள் அம்பேவெல…

அவதார் 3 முன்பதிவில் மொத்தமாக செய்துள்ள வசூல்!

அவதார் சீரிஸில் வெளிவரும் திரைப்படங்களுக்கு உலகளவில் அமோக வரவேற்பு உள்ளது. 2009 இல் வெளிவந்த அவதார் முதல் பாகம் மற்றும் 2022 இல் வெளிவந்த இரண்டாம் பாகம் ஆகிய இரு திரைப்படங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவு மிகப்பெரியது. இதில் 2009 இல்…