வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று (08) காலை லொறி ஒன்றும், மோட்டார் வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில் லொறி வீதியில் கவிழ்ந்துள்ள நிலையில், போக்குவரத்துக்குக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By RifkaNF