பிரபாகரன் பயங்கரவாதி என்று இங்கே யாராவது கையுயர்த்தி கூறுங்கள் பார்ப்போம் என சபையில் பகிரங்கமாக தெரிவித்த  அர்ச்சுனா இராமநாதன் எம்பி, வடக்கில் உங்களை சிங்கள பிரபாகரனாக கருதியே தமிழ் மக்கள் வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார்.

பிரபாகரன் பயங்கரவாதி இல்லை என்பது போலவே  ரோஹண விஜேவீரவும் பயங்கரவாதியல்ல என்று என்னால் கையுயர்த்தி கூற முடியும் என்றும்  வடக்கில் உங்களை சிங்கள பிரபாகரனாக கருதியே உங்களுக்கு நாம் வாக்களித்தோம் என்றும் தெரிவித்தார்.

பிரபாகரன் பயங்கரவாதி என்று இங்கே யாராவது கையுயர்த்தி கூறுங்கள் பார்ப்போம் என  அர்ச்சுனா இராமநாதன் எம் பி சவால்விட்டபோது சபையில்  எந்தவொரு பெரும்பான்மை இன  எம்.பி.யும் கையுயர்த்தி பிரபாகரன் பயங்கரவாதி என்று கூறவில்லை.
பாராளுமன்றத்தில் நேற்று  இடம் பெற்ற ஜனாதிபதிகளின்  உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

1988இல் அரசாங்கத்தின் கேவலமான செயற்பாடுகளுக்கு எதிராக போராடினீர்கள். .இதன்படி நீங்களும் எங்களைப் போன்றவர்கள் என்றே  எமது மக்கள் நினைத்தனர். எங்களுக்காக இறந்த பிரபாகரனை நான் கடவுள் என்றே கூறுகின்றேன். அதேபோன்று ரோஹண விஜேவீரவையும் கடவுளாகவே பார்க்கின்றோம். எனினும் உங்களின் வடக்கிலள்ள எம்.பிக்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.

அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றார். அங்கே நாம் மைதானம், பாஸ்போர்ட் அலுவலகத்தை கோரவில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறே கோருகின்றோம். ஆனால் இதுவரை அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் ஜெனீவா செல்வேன். எனக்கு நடந்தவை தொடர்பில் கூறுவேன். எமது மக்களுக்காக அங்கே முன்னிற்பேன். வேண்டுமென்றால் திரும்பி வரும் போது என்னை கைது செய்யலாம். நான் உங்களை காப்பாற்றியவர்களை குழிதோண்டி புதைக்க மாட்டேன். பிரபாகரன் குண்டுதாக்குதல்களை நடத்தியதாக கூறுகின்றீர்கள். வேண்டுமென்றால் அதற்காக நான் மன்னிப்பு கோருகின்றேன். நீங்கள் ரோஹண விஜேவீர செய்தவை எல்லாம் சரியென்று கூறுங்கள் பார்ப்போம்.

நான் சிங்கள மக்களையும் நேசிக்கின்றேன். எப்போதாவது நான் சிங்கள பிரதேசத்தில் வாக்கு கேட்பேன். அப்போது எத்தனை பேர் மிஞ்சுவார்கள் என்று பார்ப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

By RifkaNF