ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இன்றைய (23) போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. 

இந்தப் போட்டி அபுதாபியில் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமானது 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது 

இதன்படி முதலில் துடுப்பாட களமிறங்கிய இலங்கை அணியில் இன்று இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. 

கமில் மிசார மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோருக்கு இன்றைய போட்டியில் ஓய்வளிக்கப்பட்டது 

இந்நிலையில் அவர்களுக்கு பதிலாக சாமிக கருணாரட்ன மற்றும் மஹீஷ் தீக்‌ஸன ஆகியோர் இன்றைய போட்டியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் சஹின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 134 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

By RifkaNF