குருணாகல் – மெல்சிறிபுர நா உயனவிலுள்ள ஆரண்ய சேனாசனவில் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் கார் உடைந்து வீழ்ந்ததில் 07 பிக்குகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 06 பிக்குகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மெல்சிறிபுர நா உயன ஆரண்ய சேனாசனம் மலைப்பகுதியிலேயே அமைந்துள்ளது. இதனால் பிக்குகள் வசிக்கும் மடங்களுக்கு பயணிப்பதற்கு வசதியாக கேபிள் கார் பயன்படுத்தப்படுகிறது. இது பல ஆண்டுகளாக நடைமுறையிலுள்ளது.
நேற்றிரவு(24) 13 பிக்குகள் பயணித்த சந்தர்ப்பத்தில் கேபிள் கார் உடைந்து வீழ்ந்துள்ளது. உயிரிழந்த 07 பிக்குகளில் ரஷ்யாவை சேர்ந்த 02 பிக்குகளும் கம்போடியாவைச் சேர்ந்த பிக்கு ஒருவரும் அடங்குகின்றனர்.
