அனுராதபுரம், தலாவ, மிஹிரிகம சந்தியில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவிலிருந்து குளியாப்பிட்டி நோக்கி பயணித்த லொறி மற்றும் ஜா-எல பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த வேன் ஆகியன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் 25 வயதான 02 இளைஞர்களும் 31 மற்றும் 38 வயதுடையவர்களும் உயிழந்துள்ளனர்.ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிவோரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், வேன் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்கான காரணமென கூறியுள்ளனர்.

By RifkaNF