மாவனெல்ல – அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீடொன்றுக்கு அருகில் மதில் சுவரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீதே இன்று(29) முற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

பொலிஸார், பிரதேச மக்கள், மாவனெல்ல பிரதேச செயலக அதிகாரிகள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

மண்மேட்டில் புதையுண்டு காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

By RifkaNF