முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை ஒக். 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-8050455532790881&output=html&h=280&adk=1267709964&adf=505580485&pi=t.aa~a.3293303964~i.5~rp.4&w=661&fwrn=4&fwrnh=100&lmt=1759424435&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8145939342&ad_type=text_image&format=661×280&url=https%3A%2F%2Fwww.thinakaran.lk%2F2025%2F10%2F02%2Fbreaking-news%2F156037%2F%25e0%25ae%25ae%25e0%25ae%25b9%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25ae%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be-2%2F&fwr=0&pra=3&rh=166&rw=661&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTUuMC4wIiwieDg2IiwiIiwiMTQwLjAuNzMzOS4yMDgiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siQ2hyb21pdW0iLCIxNDAuMC43MzM5LjIwOCJdLFsiTm90PUE_QnJhbmQiLCIyNC4wLjAuMCJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjE0MC4wLjczMzkuMjA4Il1dLDBd&abgtt=6&dt=1759424435305&bpp=4&bdt=1241&idt=-M&shv=r20251001&mjsv=m202509250101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De1186b5d07725663%3AT%3D1759085163%3ART%3D1759424293%3AS%3DALNI_MYMhZbKbeDwEhNaKEspE-AcOAlEpw&gpic=UID%3D0000119bfe5d57ac%3AT%3D1759085163%3ART%3D1759424293%3AS%3DALNI_Ma-xIlDVwUaT2bEHBH43Zoj5ZnXJA&eo_id_str=ID%3D62ce50afefc7a077%3AT%3D1759085163%3ART%3D1759424293%3AS%3DAA-AfjZxoL1bZXIPIhWz7cjM19ht&prev_fmts=0x0&nras=2&correlator=2516795489962&frm=20&pv=1&u_tz=330&u_his=5&u_h=800&u_w=1280&u_ah=752&u_aw=1280&u_cd=24&u_sd=1.5&dmc=8&adx=10&ady=1112&biw=1023&bih=628&scr_x=0&scr_y=0&eid=95370628%2C95372357%2C31094910%2C95368094&oid=2&pvsid=7177092952594704&tmod=2012832808&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.thinakaran.lk%2F2025%2F10%2F02%2Fbreaking-news%2F156023%2F%25e0%25ae%25ae%25e0%25ae%25b9%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25ae%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25aa%2F&fc=1408&brdim=38%2C24%2C38%2C24%2C1280%2C0%2C1052%2C722%2C1038%2C628&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1.01&td=1&tdf=2&psd=W251bGwsW251bGwsbnVsbCxudWxsLCJkZXByZWNhdGVkX2thbm9uIl0sbnVsbCwxXQ..&nt=1&pgls=CAEQBRoGMy4zMS4z&ifi=15&uci=a!f&btvi=1&fsb=1&dtd=552

ரூ. 28 மில்லியனுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம் குறித்து வெளியிடத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஓய்வுபெற்ற இராணுவ கேணலான நெவில் வன்னியாராச்சி, வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) காலை முன்னிலையான போதே கைது செய்யப்பட்டார்.

By RifkaNF