ஏழுவர் கொண்ட ஆடவருக்கான ஆசிய ரக்பி தொடரில் சீனாவை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நேற்று இந்தப் போட்டி நடைபெற இருந்தது.
மழைக் காரணமாக குறித்த போட்டி இன்று காலை ஆரம்பமானது.
இந்த போட்டியில் சீனாவை 34 – 7 என்ற கோல் கணக்கில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
அடுத்தப் போட்டியில் இலங்கை அணி ஜப்பானை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
