அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் உபாதைக்கு உள்ளான இந்திய அணியின் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போட்டியில் பின்னோக்கி ஓடி சென்று பிடியெடுத்த போது, நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார்.
அதில் அவருக்கு இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.
இதனால் வலியால் துடித்த அவர் சிகிச்சைக்காக பெவிலியன் அழைத்து செல்லப்பட்டார். அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் காயத்தின் தன்மை குறித்து ரசிகர்களிடையே கலக்கம் ஏற்பட்டது.
இதனிடையே அவரது காயம் குறித்து பி.சி.சி.ஐ., “ஸ்ரேயாஸ் ஐயரின் இடது விலா எலும்பில் பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது.
அவரது காயம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்” என்று அந்த போட்டியின்போது தெரிவித்தது.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயரின் உடலுக்குள் ரத்தக்கசிவு இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
