அட்லாண்டிக் புயல்களில் மிக சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல், கரீபியன் தீவு நாடுகளான ஹெய்ட்டி மற்றும் ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்தியதோடு, தற்போது கியூபாவைத் நோக்கி நகர்ந்து அங்கு தாக்கி வருகிறது.
இந்த புயல் ஏற்பட்ட உயிர்ச்சேதம் 26 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 25 பேர் ஹெய்ட்டியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
புயல் நேற்றுமுன்தினம் (28) ஜமைக்காவைத் தாக்கியபோது, இது அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின் பதிவுகளில் உள்ள சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக இருந்தது.
பின்னர் கடுமையாக புயல் தாக்கியுள்ளது.
புயல் காரணமாக தீவின் மேற்குப் பகுதியில் மரம் விழுந்ததில் ஒரு குழந்தை பலியான நிலையில் ஜமைக்காவில் பதிவான ஒற்றை உயிரிழப்பாகும்.
பிரதமர் அண்ட்ரூ ஹோல்னெஸ் ஜமேய்க்காவை “பேரழிவு பகுதியாக” அறிவித்தார்.
புயலின் வேகத்தால் வீடுகளின் கூரைகள் அடித்து சென்றன, விவசாயப் பகுதிகள் நீரில் மூழ்கின, மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், ஜமேய்காவின் சுமார் 2.8 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.
நிலைமை சீரடைய காலதாமதமாகும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புயல் தாக்கம் காரணமாக கியுபாவில் 7,35,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
