இந்தோனேசியாவில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பேரழிவு தரும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதுடன், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 75,219 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், மேற்கு சுமாத்திரா முழுவதும் 106,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு அறிக்கைகள் கூறுகின்றன.
மேற்கு சுமாத்திராவின் அகம் மாவட்டத்தில் சடலங்களைத் தேடும் பணியில் மீட்பு அதிகாரிகள் இன்னும் ஈடுபட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் ஆற்றங்கரைகள் உடைந்து வெள்ள நீர் மலைக் கிராமங்கள் வழியாகப் பாய்ந்துள்ளதால், ஆயிரக்கணக்கான வீடுகளும் கட்டிடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
