ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்தோனேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 218 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கனமழை வெள்ளத்தார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 200-க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் 581 கல்வி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
