இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், சமோலி பகுதியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கப்பாதை ஒன்றில் கடமையாற்றிய தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ரயிலொன்றும், சரக்கு ரயில் ஒன்றும் இவ்வாறு நேற்று (30) ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த ரயிலில் 109 பேர் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
