2024 க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறிக்கும் இணைவதற்குத் தேவையான குறைந்தபட்ச “Z” புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பாடநெறி மற்றும் பல்கலைக்கழகத்தை பின்வரும் முறைகள் மூலம் கண்டறியலாம்.
1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மூலம்: www.ugc.ac.lk
2. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கங்களை அழைப்பதன் மூலம்: 0112695301/ 0112695302/ 0112692357/ 0112675854
3. பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்களா இல்லையா என்பது குறித்து குறுஞ்செய்தி (SMS) மூலம் அறிவிக்கப்படும்.
“Z” புள்ளிகள் அடங்கிய அறிவிப்பு வருமாறு,
