பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள தேவி பாலிகா சுற்றுவட்டத்தில் இருந்து டி.எஸ். சேனநாயக்க சந்திக்கு வரையான பகுதியில், கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (27) காலை முதல் வீதியில் விரிசல் மற்றும் பள்ளம் ஏற்பட்டு கழிவுநீர் வீதியில் பாயும் அபாயம் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதால், கொழும்புக்கு செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், கொழும்பில் இருந்து வெளியேறும் வாகனங்கள் வழமை போல் இயங்கும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.