ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

இன்று (2) முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி முகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் செல்லும் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்தார். 

இந்நிலையில், பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆறு ​பேருக்கு ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

By RifkaNF