வட்டுவாகல் பாலம் இரு இடங்களில் உடைப்பெடுப்பு
வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இந்தப் பாலம், முல்லைத்தீவு நகரத்தை அடைவதற்கான முக்கிய நுழைவாயில் பாதையாகும். முல்லைத்தீவிலிருந்து பரந்தன் வரையான வீதியில் நந்திக்கடல்…
சீரற்ற வானிலையால் நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 2691 குடும்பங்களை சேர்ந்த 12304 பேர் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1914 குடும்பங்களை…
நிவாரணப் பணியின் போது உயிரிழந்த விமானி குறித்து உருக்கமான பதிவு
வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று…
மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சு, லீக்ஸ் போன்ற மரக்கறிகளும் 500 ரூபாய் முதல்…
டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு, 366 பேரை காணவில்லை
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…
ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – விமானப் படை
மீட்பு பணிகள் இடம்பெறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது. உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான மீட்புப் பணிகளுக்கான விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் விமானப்படை எச்சரித்துள்ளது. அத்துடன், அனைத்து ட்ரோன்…
அனர்த்தத்திற்கு உள்ளானோருக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு இலகுவானதும் வெளிப்படைத்தன்மை கொண்டதுமான இந்த…
குழந்தைகள் மத்தியில் தொற்றுநோய் அபாயம்: வைத்தியர் தீபால் எச்சரிக்கை
வெள்ளம் மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக குழந்தைகளிடையே தொற்று நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக குழந்தை நோயியல் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறான குளிரான காலநிலையுடன் வயிற்றுப்போக்கு, குடற் காய்ச்சல், எலிக்காய்ச்சல் மற்றும் இன்புளூயன்ஸா உள்ளிட்ட நோய்கள்…
மீட்புப் பணியில் ஈடுபட்ட விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து
அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் இருந்தவர்கள் காயமடைந்ததாக…
கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கலயில் பூட்டு
கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கல ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் 15 மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யக்கல ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பாலத்தின் நடுப்பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். எனவே மாற்று வீதிகளை…
