நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் ஒரு கிலோகிராமுக்கு குறைவான எடையுள்ள போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு அனைத்து நீதவான்களுக்கும் அறிவித்துள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி…

விசேட பண்ட வரியை அதிகரிக்க அனுமதி

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (21) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், 2025ஆம்…

மீண்டும் நாளை சேவையில் ஈடுபடவுள்ள ரயில்கள்

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் மார்க்கத்தில் நாளை (23) முதல் பல ரயில்களை மீண்டும் இயக்க இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கண்டியில் இருந்து கொழும்பு கோட்டைக்கும், கொழும்பு கோட்டையில் இருந்து கண்டிக்கு செல்லும் பல…

இன்று 2 வது தடவையாகவும் தங்க விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது, ஒரு பவுன் தங்கத்தின் விலை 30,000 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு…

சீரற்ற வானிலை – பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 387 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன்,…

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை 10.20 மணியளவில் வெலிகம பிரதேச சபையில் உள்ள அவரது அறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரில் ஒருவர் கடிதம் ஒன்றில் கையெழுத்தை பெற்றுக்கொள்வதை போல்…

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணி நேரம் நீர் வெட்டு

கொழும்பு 01 முதல் 15 வரை மற்றும் பல முக்கிய நகரங்களில் நாளை (23) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. நாளை காலை 10.00 மணி முதல்…

இறக்குமதி அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை நிர்ணயம் அதன் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பச்சை…

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் சொகுசு பேருந்து விபத்து-இளைஞர் ஒருவர் பலி

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை விபத்திற்குள்ளானது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில்…

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த…