தலவாக்கலை ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தில் தீ விபத்து
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தில் உள்ள 9 ஆம் இலக்க லயன் தொடர் குடியிருப்பில் நேற்றிரவு (23) ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு குடியிருப்பு பகுதியளவு சேதமடைந்துள்ளது. குறித்த குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் திடீரென பரவிய தீயால்,…
பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!
2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர்-அதிபர்கள் சங்கங்கள், நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர்…
வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை: சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்கள்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் பெரும்பாலும் பாதுகாப்புப் படையிலிருந்து தப்பிச் சென்றவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த…
இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்தே இந்தப் படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் படகு,…
2026 முதல் புதிய கல்வி சீர்திருத்தம் அறிமுகம்
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பு கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளன. 2026 ஆம் ஆண்டு…
வெலிகம படுகொலை – 50 சிசிரிவி காட்சிகளை பயன்படுத்தி விசாரணை!
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் சுமார் ஐம்பது CCTV கெமராக்களின் காட்சிகளை ஆராய்ந்து விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரியும், அவர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் வழியில்…
இன்றும் குறைந்த தங்கம் விலை!
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபாய் குறைந்துள்ள அதேவேளை, இன்று (23) மட்டும் 10,000 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, இன்று (23) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன்…
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பாடசாலை மாணவர்கள்!
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா…
2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம்
2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற துணைக்குழு நேற்று (22) பாராளுமன்றத்தில் கூடியபோது,…
ரஷ்யா மீது மீண்டும் தடைகளை அறிவித்த அமெரிக்கா!
ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய தடைகளை அறிவித்துள்ளது. உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த தடைகள் விதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
