Category: உள் நாட்டு செய்திகள்

இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் 22,522 குடும்பங்கள்

நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் அமைந்துள்ள 762 இடைத்தங்கல் முகாம்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 நபர்கள் இதுவரை தங்கியுள்ளதாக…

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதி

பாடசாலை செல்லும் மாணர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என…

அனர்த்தத்தினால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு

நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன. அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை இன்று (15) அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட 147…

அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வௌியீடு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பில், பாதுகாப்புச் செயலாளரினால் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழிகாட்டல் தொடர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள்.

ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்…

பேஸ்புக் களியாட்டம் – கைதானவர்களில் NPP முக்கியஸ்தரின் மகள்!

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டமொன்றை நடத்திக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டவர்களில், தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி பிரதி மேயரின் மகளும் இருந்தமை தெரியவந்துள்ளது. தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில்…

யாழ் சிறையின் நிவாரண உதவி- மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (13) கையளிக்கப்பட்டன. சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு…

இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று (12) இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கம்…

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமையில்

“இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது” என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி…

அனர்த்தத்தால் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க தீர்மானம்

“டித்வா” புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அவசர…