Category: உள் நாட்டு செய்திகள்

A/L உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் நடைபெறவிருந்த ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும். பரீட்சை…

மாவிலாறு வெள்ளம்: விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் 121 பேர் மீட்பு

மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச்…

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாக இடைநிறுத்தம்: மின்சார சபை அறிவிப்பு

கொட்டுகொட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள நிலைமை காரணமாக, கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இதன்…

மாவிலாறு அணைக்கட்டு பல இடங்களில் உடைப்பு: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்

மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு பல இடங்களில் உடைப்பெடுத்துள்ளதால், மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சேருவில ரஜமஹா விகாரை ஒரு பாதுகாப்பான இடமாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மண்சரிவில் சிக்குண்ட 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு அருகே உள்ள இராணுவ சோதனைச் சாவடியின் மீது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை லக்சபான இராணுவ முகாமின் மீட்புக் குழுவினர் மீட்டு,…

வெள்ளம் மற்றும் மண்சரிவு: நாடு முழுவதும் 206 வீதிகள் தடை

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாடு முழுவதும் பல வீதிகள் மற்றும் பாலங்களுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார். அதன்படி, பிரதான வீதிகள் உட்பட நாடு…

சீரற்ற வானிலை: உயிரிழப்பு 153, காணாமல்போனோர் 191

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (29) மாலை 6.00 மணிக்கு அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில்…

இன்று மாலைக்கான ரயில் சேவை அட்டவணை அறிவிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (29) மாலைக்கான ரயில் சேவை அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ரயில் சேவைகளை பின்வருமாறு முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது: களனிவௌி ரயில் மார்க்கம்: கொழும்பு கோட்டை – பாதுக்கை வரை: பி.ப. 04.25 – சாதாரண ரயில்…

மகா ஓயாவை அண்மித்த பகுதிகளில் கடும் வௌ்ளம் ஏற்படும் அபாயம்

எதிர்வரும் 24 மணி நேரத்தில் மஹா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் மிக அபாயகரமான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகா ஓயாவை அண்மித்த மேட்டு நிலப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த நிலைமை…