Category: உள் நாட்டு செய்திகள்

பதுளை – கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதுளை – கொழும்பு வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

யாழில் இன்று முதல் புதிய பேருந்து சேவை

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு – காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து கொழும்பில் இருந்து வந்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம்…

அனர்த்த பாதிப்பு – பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்துத் திட்டம்

கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையால் தடங்கல்களை எதிர்கொண்டுள்ள உயர்தரப் பரீட்சார்த்திகள், உரிய மாற்று வீதிகள் ஊடாக தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியன இணைந்து விசேட போக்குவரத்துத்…

முக்கிய ரயில் சேவையில் இருந்து இடைவிலகும் இயந்திர சாரதிகள்!

மஹவ முதல் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் சரக்கு மற்றும் எரிபொருள் தாங்கி ரயில் சேவைகளை நிறுத்துவதற்கு ரயில்வே லொகோமோட்டிவ் ஒபரேட்டிங் இன்ஜினியர்ஸ் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (23) நள்ளிரவு முதல் சரக்கு மற்றும் எரிபொருள் ரயில் சேவைகள்…

சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில்…

பேருந்து பயணிகளுக்கான மகிழ்ச்சி செய்தி!

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான ஆரம்ப விழா நாளை காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து…

வங்கக்கடலில் உருவாகிறது மற்றுமொரு புயல்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (23) காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு…

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்றும் திறப்பு

தொடரும் பலத்த மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்றும் (23) திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 4 அடி உயரத்திலும்…

350 அத்தியாவசிய மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை!

மேலும் 200 மருந்துகளுக்கு அமுல்படுத்த எதிர்பார்ப்பு இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, ஒரே நேரத்தில் 350 வகையான மருந்துகளின் விலையை பாரியளவில் கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ…

கரையோர ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

கரையோர ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து நடவடிக்கைகள் வெலிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (21) பிற்பகல் 02.05 மணியளவில் மாத்தறையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்று, கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.…