Category: உள் நாட்டு செய்திகள்

சாரதிகளுக்கு, அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ‘பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (20) அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக்…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் நடத்திய சோதனையின் போதே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மீனவர்களுடன், 35 டிங்கி படகுகளையும்,…

யாழில் விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (20) விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி மதில் ஒன்றில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்…

மண்டைத் தீவு சர்வதேச மைதான அகழ்வில் வெடிப்பொருட்கள் மீட்பு

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மண்டைத் தீவு சர்வதேச கிரிக்கெட் மைதான வளாகத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. T – 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்றுறை நீதிமன்ற அனுமதியுடன்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) வயது மூப்பு காரணமாக காலமானார். மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த 86 வயது இவர், ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார். இவர், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்…

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20) நடைபெறுகிறது. கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இவ்விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒன்றாக நிற்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்போம்” என்ற கருப்பொருளின் கீழ்…

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள கணினி கட்டமைப்புகளில் சைபர் தாக்குதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட “எல்லை கணினி கட்டமைப்பு மீண்டும் வழமைப் போல் செயற்பட ஆரம்பித்துள்ளது. குறித்த கணினி கட்டமைப்பு இன்று (20) பிற்பகல் 01.45 மணியளவில் செயலிழந்தது.…

மன்னார் வளைகுடா பகுதியில் கரையொதுங்கிய கடல் பசு!

தமிழகத்தின் – திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் இறந்த நிலையில் கடல் பசுவொன்று கரை ஒதுங்கியுள்ளது. 8 வயது மதிக்கத்தக்க கடல் பசு ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை…

புறக்கோட்டையில் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் இராணுவ ஹெலிகொப்டர்

புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த இராணுவத்திற்கு சொந்தமான 2 வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் பெல் ரக ஹெலிகொப்டர்…

புறக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல்

புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தின் 3வது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக…