Category: உள் நாட்டு செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வௌியானது

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்சமயம் வௌியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட, 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி…

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி வழங்கினார். விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும், சட்ட மா அதிபர் திணைக்களத்தில்…

செம்மணியில் இன்றும் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 42 வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து…

159 ஆவது பொலிஸ் தினம்; பொலிஸ் தலைமையகத்தில் இன்று விசேட நிகழ்வு

பொலிஸ் தினத்தை முன்னிட்டு இன்று (03) பொலிஸ் தலைமையகத்தில் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது. 159 ஆவது பொலிஸ் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்முல்லை சந்தியிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி…

மத்திய அதிவேக வீதியில் கோர விபத்து – இருவர் பலி

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லொறி ஒன்றும் பவுசர் வாகனம் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று (02) ஆகும். கட்சியின் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகளை இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

வடக்கின் முதலாவது தெங்கு விதை உற்பத்தி அலகு

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதலாவது தெங்கு விதை உற்பத்தி அலகு இன்று (02) காலை பளை நகரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டம் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும்…

உலக தெங்கு தின கொண்டாட்டம் முல்லைத்தீவில்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றும் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதற்கமைய, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் “நாடே சுபிட்சமாக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025” நிகழ்வு தற்சமயம்…

காலிமுகத்திடல் பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று (2) முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி முகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் செல்லும் வீதியின் போக்குவரத்து…

இலத்திரனியல் மயப்படுத்தப்படும் யாழ் நூலகம்; ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பு

யாழ்ப்பாண நூலகத்தை இலத்திரனியல் நூலகமாக (e-Library) அபிவிருத்தி செய்யும் திட்டம் நேற்று (01) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, யாழ்ப்பாண பொது நூலகத்திற்காக jaffna.dlp.gov.lk என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் யாழ்ப்பாண பொது நூலகத்தில்…