Month: October 2025

சர்வதேச கபடி அரங்கில் இலங்கை அணியின் தலைவியாக செயற்படும் மட்டக்களப்பு வீராங்கனை!

இளையோர் ஆசியக் கிண்ண கபடித் தொடரில் இன்றைய இலங்கை_இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்று மட்டக்களப்பு கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலய மாணவி தி. நிஷாளிணி செயற்பட்டார். இம்முறை கோரகல்லிமடு மண்ணை சேர்ந்த 3 வீராங்கனைகள் இளையோர்…

இஷாரா செவ்வந்திக்காக வலையில் சிக்கிய தக்ஷி

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு…

இலங்கை மகளிர் அணி வெற்றி

மகளிருக்கான ஒருநாள் உலக கிண்ணத் தொடரில் இன்று (20) பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில்…

ருஹுணு பல்கலையின் விவசாய பீட மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (19) நடைபெற்ற…

விமான நிலையத்தில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குவழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தை 2,000 ரூபாவில் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்த வௌிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,…

18 மலையக ரயில் சேவைகள் ரத்து

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் இன்று (20) இரவு சேவையில் ஈடுபடவிருந்த தபால் ரயில் உட்பட மேலும் 7 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இஹல கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று…

இன்றிரவு விண்கல் மழை!

இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை பொழிவை இன்றிரவு (20) பார்வையிட முடியும் என வானியலாளர்கள் கூறுகின்றனர். இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி…

359,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டு தொகையில் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான…

பல அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் செயலிழப்பு

இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட ஒரு செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகளில் தற்காலிக இடையூறுகள் தொடர்வதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த…