Month: November 2025

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடியும் வரை இந்தத்…

முச்சக்கர வண்டி கட்டணங்கள் திருத்தப்படாது

எரிபொருள் விலைச் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர கருத்துத் தெரிவிக்கையில், லங்கா பெற்றோலிய…

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறையானது தற்போது “குழப்பத்தில் இருந்து அதிக குழப்பத்தை” நோக்கிச் சென்றுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தச்…

சர்வதேச T20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள்: பாபர் அசாம் முதலிடம்!

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நேற்று (31) தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் அவர் பெற்ற 11 ஓட்டங்களுடன் இந்தப் பட்டியலில் அவர் முன்னுக்கு வந்துள்ளார்.…

தான்சானியாவில் வெடித்தது மோதல்: 700 பேர் பலி என அச்சம்

தான்சானியாவில் ஜனாதிபதி தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வெடித்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நேற்று கடந்த 29 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில்…

இன்று முதல் அமுலுக்கு வரும் ‘ஷொப்பிங் பை’ சட்டம் இதோ!

கைப்பிடிகளுடன் கூடிய (இரண்டு கைப்பிடிகள் கொண்ட) பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று (நவம்பர் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய, இனிவரும் காலங்களில் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது, கடைகள்…

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. USGS தரவுகளின்படி, நிலநடுக்கம்…