Month: December 2025

டக்ளஸூக்கு வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் குறித்தும் விசாரணை

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர்…

Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கிய தோட்டத் தொழிலாளர்கள்

சில தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒருநாள் சம்பளத்தை Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்களே “டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நிதியத்திற்கு தமது நிதியை வழங்கியுள்ளனர். அதற்கமைய குறித்த…

பெருவில் பாரிய நிலநடுக்கம் பதிவு

பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட உயிர்…

சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழரசுக் கட்சி கைவிடாது

தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாது என பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக்…

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி முதல்

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் இம்முறை ஒவ்வொரு வீட்டிற்கும் வருகை தரமாட்டார்கள் என அந்த அமைப்பு…

அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் தயார் நிலையில்!

எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலை அதிகரிப்புக்கு முகம் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நிலவக்கூடிய அலை வடிவான காற்று காரணமாக மழையுடனான வானிலை…

கடுகண்ணாவை ஊடாக பயணிப்போருக்கான அறிவித்தல்

மண்சரிவு காரணமாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதி, தற்காலிகத் தீர்வு வழங்கப்பட்டே போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மழைக்காலங்களில் இந்த வீதியைப் பயன்படுத்தும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி…

368,000 ரூபாவாக அதிகரித்த தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகின்றது. இன்று (27) நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,553 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில்,…

கைதான டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல் உத்தரவு

பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு…

நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல்லை விநியோகிக்கும் புதிய திட்டம்

கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கடந்த போகத்தில் சேகரிக்கப்பட்ட நெல்லை லங்கா…