Month: January 2026

நாமலுக்கு எதிரான வழக்கு: ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில்…

‘கனவுப் பாடசாலை’ நோக்கிய பயணம் ஆரம்பம்

இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். அந்தப் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதை வலியுறுத்திய பிரதமர், 2030…

நாட்டில் ‘நிபா’ வைரஸ் அபாயம்? – சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கைக்குள் ‘நிபா’ வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ‘நிபா’ வைரஸ் தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு…

புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பம் கோரல்

2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக, தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களை ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவமானது,…

கொலம்பியாவில் விமான விபத்து: அரசியல்வாதி உட்பட 15 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 15 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பயணிகள் பட்டியலின்படி, அந்த விமானத்தில் அந்நாட்டு அரசியல்வாதியான டையோஜெனெஸ் குயின்டெரோ (Diogenes Quintero) மற்றும்…

நபர் ஒருவரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் கைது

முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேரா தலைமையில் இன்று (28) பிற்பகல் களுத்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் களுத்துறை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை…

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – GMOA

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய…

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக, தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை குழாம் இன்று (28) அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் இந்தத் தொடருக்காக 16 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான…

ஐசிசி ஒருநாள் தரவரிசை: இலங்கை அணிக்கு பின்னடைவு

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று (27) நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இழந்ததன் காரணமாகவே, 5ஆவது…

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கொழும்பு…