Month: January 2026

விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை மாணவர்கள், தமது விரிவுரையாளர் ஒருவரை மாற்றக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நீடிக்கின்றது. நேற்றைய (09) நிலவரப்படி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் நால்வர்…

வெலிசறையில் புதிய சிறைச்சாலை

வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு ‘ஜனநாயகன்’ வௌியாகாது!

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த…

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை கடக்கும்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09) மாலை 4.00…

சிவனொளிபாத மலைக்கு இனி அச்சமின்றி செல்லலாம்!

சிவனொளிபாத மலை – ஹட்டன் வீதியில் மண்சரிவுக்குள்ளான மகாகிரிதம்ப பகுதி புனரமைக்கப்பட்டதன் பின்னர், சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்கு இனி எவ்வித அபாயமும் இல்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மகாகிரிதம்ப பகுதியில் மண்சரிவு அபாயம் நீங்கியுள்ளதாகவும், யாத்ரீகர்கள் பாதுகாப்பாக…

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்கமறியல்…

25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் – ஜனாதிபதி

‘டித்வா’ புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (09) முற்பகல் கல்நேவ, ஹந்துன்கம, அலுபெத்த பகுதியில் முழுமையாக…

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதற்கமைய 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா 2…

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கை டி-20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடருக்கான 18 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவார். சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் டி20 குழாமுக்கு…

வெலிமடை – மஸ்பன்ன வீதியில் மீண்டும் மண்சரிவு

வெலிமடை, மஸ்பன்ன வீதியின் கம்சபா பம்பரபான பிரதேசத்தில் நிலவும் மழை காரணமாக மண் மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது. மண்சரிவு காரணமாக வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். நேற்று (05) மாலை இவ்வாறு மண் மேடு…