யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம்(20.06.2025) வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ, அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து கடிதத்தை வழங்கி வைத்துள்ளார்.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம் | Maradalingam Pradeepan Appointed As Governor

பதில் அரசாங்க அதிபர்
மருதலிங்கம் பிரதீபன், 2024 மார்ச் 09ஆம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.