இலங்கை கரப்பந்து அணிகளின் தேர்வு முகாம்கள் ஜூலையில்
பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் நடைபெறவுள்ள மத்திய ஆசிய கரப்பந்தாட்ட லீக போட்டிகளில் பங்கேற்பதற்கான இலங்கை மகளிர் மற்றும் ஆடவர் அணிகளை தேர்வு செய்வதற்கான முகாம்களை நடத்த இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி மத்திய ஆசிய ஆடவர் லீக் கரப்பந்தாட்ட போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 22 தொடக்கம் 28 ஆம் திகதி வரை பங்களாதேஷிலும் மத்திய ஆசிய மகளிர் லீக் கரப்பந்தாட்டப் போட்டி நவம்பர் 6 தொடக்கம் 15 ஆம் திகதி வரை நேபாளத்திலும் இடம்பெறவுள்ளனது.
இந்தப் போட்டிக்குச் செல்லும் ஆடவர் அணியின் தேர்வு முகாம் எதிர்வரும் ஜூலை 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் காலை 8.00 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளதோடு மகளிர் அணித் தேர்வு ஜூலை 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் காலை 8.00 தொடக்கம் இடம்பெறவுள்ளது. இந்த தேர்வு முகாம்கள் டொரிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது