பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவ வாழ்வின் பொன்விழா நன்றித் திருப்பலி 30 ஆம் திகதி
குருத்துவ வாழ்வில் பொன்விழாக் காணும் கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கிறிஸ்தவ மஞ்சரி வாழ்த்துகிறது.
பேராயரின் நன்றித் திருப்பலி எதிர்வரும் 30ஆம் திகதி கொட்டஞ்சேனைபுனித லூசியாள் பேராலயத்தில் பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பல்வேறு பங்குகளிலும் பங்குத்தந்தையாக மறை மாவட்ட ஆயராக பணி செய்து தனது பணி வாழ்வை தொடரும் பேராயர் கொழும்பு உயர்மறை மாவட்டத்தின் ஆயராகவும் பேராயராகவும் கர்தினாலாகவும் சிறப்பாக பணியாற்றி இறைவனின் திருசித்தத்தை நிறைவேற்றி வருகின்றார்.
மக்களை விசுவாசத்தில் வழிநடத்தும் அவரது சிறப்பான இந்த பணி மென்மேலும் சிறப்புடன் தொடரவும் சிறந்த உடல் நலத்துடன் அவர் தமது தூதுப் பணியை முன்னெடுக்க இறைவனைப் பிரார்த்தித்து கிறிஸ்தவ மஞ்சரி அவரை வாழ்த்துகிறது