இந்தோனேசியாவின் Bali நகரில் நடைபெற்ற Men’s Fitness Asia Pacific PRO/AM போட்டியில், இலங்கை வீரர் Segaran Sivanesarasa முதலிடம் பெற்று, நாடு முழுவதும் பெருமையை ஏற்படுத்தியுள்ளார். Natural Body Building Australia நிறுவனம் நடத்திய இந்த போட்டியில், ஆசியா பசிபிக் பிராந்தியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
Segaran Sivanesarasa தனது இலங்கை நாட்டையும், மட்டக்களப்பு St. Michael’s College (SMC)கல்லூரியையும் பிரதிநிதித்துவப்படுத்தி முதல் இடம் பெற்றுள்ளார்!
இயற்கை உடற்பயிற்சி துறையில், உடல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒழுக்கமும், நேர்மையும் முக்கியமானவை. Segaran Sivanesarasa இந்த துறையில் தனது பல ஆண்டுகளாகிய பயிற்சி, பொறுமை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
இலங்கையின் இளம் உடற்பயிற்சி வீரர்களுக்கு, Segaran Sivanesarasa வெற்றி ஒரு ஊக்கமளிக்கும் நிகழ்வாகும். “நாம் முயற்சி செய்தால் உலக மேடையிலும் வெல்ல முடியும்” என்பதற்கான ஒரு உயிருள்ள உதாரணமாக அவர் விளங்குகிறார்.

மட்டக்களப்பு SMC கல்லூரிக்கும் பெருமை!

🥇1st Place – Men’s Fitness
🥇 1st Place – Men’s Fitness Open
🥇 1st Place – Men’s Fitness Novice
🥇 Pro Athlete Title in all categories ஆகிய அனைத்து பிரிவுகளிலும் சாதித்துள்ளார்.

By RifkaNF