ஒன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரின் சுமார் 11 கோடி இந்தியா ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அந்நாட்டு அமுலாக்கத் துறை முடக்கம் செய்துள்ளது.
ஒன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
விசாரணையில், அவர்கள் இருவரும் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தி சட்டவிரோதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, சுரேஷ் ரெய்னாவின் 6.4 கோடி இந்தியா ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் (மியூச்சுவல் ஃபண்ட்), ஷிகர் தவானின் 4.5 கோடி இந்தியா ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்களான பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கும் அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியிருந்தது.
