அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. 

இந்த தொடரை 2 -1 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. 

முதல் போட்டி மழையினால் தடைப்பட்ட நிலையில், இன்றைய (8) இறுதிப் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டது. 

இன்று இடம்பெற்ற 5-வதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ஓட்டங்களை விக்கெட் இழப்பின்றி பெற்றிருந்தது. 

இதன்போது மழை குறுக்கிட்டதால் போட்டியை தொடர்ந்தும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. 

அதற்கமைய இறுதிப் போட்டி கைவிடப்பட்ட நிலையில் 2 – 1 என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

By RifkaNF