தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 26), உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவரை நினைவுகூரி, மலர்வணக்கங்கள் செலுத்தி வருகிறார்கள்.

வட அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்கள், அவரின் நினைவைப் போற்றும் நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களில் #Thalaivar, #PrabhakaranDay போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் பலரும் புகைப்படங்கள், மேற்கோள்கள், நினைவுக்குறிப்புகள் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நாளை தமிழர் உரிமைக்கான போராட்ட நினைவுநாளாகக் கருதி, பலரும் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதிப்பூர்வமாக நினைவுகூருகிறார்கள்.

இதேவேளை, இலங்கையில் சட்டத்தின் வரம்புக்குள் இருந்து செயல்படுமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

நினைவுகள் மங்காமல்… நினைவுகள் வளர்த்திடும்…

By RifkaNF